ADDED : மார் 08, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்தது உட்பட, இரண்டு சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உள்ளார்.
தமிழகத்தில், 28 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், ஜனவரி 5ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து, அந்த உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, தனி அலுவலர்களை அரசு நியமித்துஉள்ளது.
இதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல, 2024 டிசம்பர் மாதம், தமிழகத்தில் கனிமவளங்கள் உள்ள நிலங்களுக்கு வரிவிதிக்கும் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.
மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கவும், கனிமவளங்களை பாதுகாக்கவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த இரண்டு சட்ட மசோதாக்களும், கவர்னர் ரவி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன.
அவற்றுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.