ADDED : செப் 03, 2024 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: துாத்துக்குடி மாவட்டம், ஆத்துார் அருகிலுள்ள தலைப்பண்ணையூர் மேலத்தெருவை சேர்ந்த முருகன் மகன் மகேந்திரகுரு, 25. ஒப்பந்த சுகாதார ஆய்வாளர்.
கடந்த 1ம் தேதி இரவு, பொட்டல்காட்டில் நடந்த கபடி போட்டியில் விளையாடுவதற்காக, வீட்டில் இருந்து மகேந்திரகுரு பைக்கில் சென்றார். முக்காணி மெயின்ரோட்டில் சென்றபோது அவருக்கு பின்னால் வந்த வேன், பைக் மீது மோதியது.
இதில் வேனின் முன்பக்க டயரில் சிக்கிய மகேந்திரகுரு, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.