ADDED : ஏப் 06, 2024 11:21 PM
சென்னை:வானிலை மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியாவின் தென்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவு கிறது. இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். நாளை மறுதினம் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது, ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.
அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

