தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்!: வானிலை மையம் முன்னெச்சரிக்கை
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்!: வானிலை மையம் முன்னெச்சரிக்கை
ADDED : ஏப் 14, 2024 01:59 PM

சென்னை: 'தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் தமிழக மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 14) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் 41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்கும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

