கனமழை எதிரொலி பேரிடர் மீட்பு குழு ஆந்திராவுக்கு விரைவு
கனமழை எதிரொலி பேரிடர் மீட்பு குழு ஆந்திராவுக்கு விரைவு
ADDED : செப் 03, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்திலுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்திலிருந்து, துணை கமான்டன்ட் சங்கரபாண்டியன் உத்தரவின்படி, 30 வீரர்கள் இடம் பெற்ற ஐந்து குழுக்கள், ஆந்திராவின் விஜயவாடாவிற்கு நேற்று விரைந்தன.
அக்குழுக்கள் ரப்பர் படகுகள், ரோப், மரம் வெட்டும் கருவி, மருத்துவ உபகரணங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட அதிநவீன மீட்பு உபகரணங்களை லாரியில் கொண்டு சென்றன. மோப்ப நாய்களான டைசன், பிரின்ஸ் ஆகியவையும் உடன் சென்றன.