சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை
UPDATED : ஜூலை 03, 2024 10:10 PM
ADDED : ஜூலை 03, 2024 09:21 PM

சென்னை: சென்னை ,திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதன்படி
சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி மயிலாப்பூர் ,வள்ளுவர் கோட்டம், டி, அண்ணாசாலை, சைதாபேட்டை கோடம்பாக்கம், வடபழனி , தி.நகர் மேற்கு மாம்பலம், காட்டுப்பாக்கம்,குமணன் சாவடி, கொளத்தூர் செம்பரம்பாக்கம்,கொரட்டூர் வில்லிவாக்கம் கீழ்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம்,நியூ ஆவடி சாலை, வேளச்சேரி, தரமணி , துரைப்பாக்கம், பெருங்குடி, திருவான்மியூர், திருமங்கலம் முகப்பேர், அண்ணாநகர், அரும்பாக்கம் செனாய்நகர் வளசரவாக்கம், ராயபுரம்,பெரம்பூர்,வியாசர்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
திருவொற்றியூரில் காற்றுடன் மழை
திருவொற்றியூர், எண்ணூர், புது வண்ணாரப்பேட்டை, காசிமேடுஉள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம்
ஆவடி, அயப்பாக்கம், அம்பத்தூர் திருப்பாச்சூர் காக்களூர்,புட்லூர் ஈக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இன்றி இருளில் தவித்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் , சேலையூர், பெருங்களத்தூர்,. பல்லாவரம் , பம்மல் , வண்டலூர் உள்ளிட்ட சுறறுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பெய்த திடீர் மழை காரணமாக சைதாப்பேட்டை, கிண்டி, அண்ணாசாலை, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.