ADDED : மே 13, 2024 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று மாலை ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. சில மாதங்களாக வறண்ட வானிலையுடன் குளு குளு நகரில் புழுக்கம் அதிகமாக இருந்தது.
அக்னி நட்சத்திர வெயில் தொடங்கிய நிலையில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. சில தினங்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்கிறது. தொடர்ந்து மேக கூட்டங்கள் தரை இறங்கிய நிலையில் ரம்மியமான சூழல் நிலவியது.
நேற்று மாலை, 5:00 மணிக்கு பின் இடியுடன் 1 மணி நேரம் கனமழை பெய்தது. சாரல் மழையும் நீடித்தது. கனமழையால் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இங்குள்ள பாம்பார்புரம், வெள்ளி நீர்வீழ்ச்சி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.