தேசிய அற இலக்கியமாக திருக்குறளை அறிவிக்க வழக்கு உயர் நீதிமன்றம் தள்ளுபடி
தேசிய அற இலக்கியமாக திருக்குறளை அறிவிக்க வழக்கு உயர் நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஆக 07, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:திருக்குறளை தேசிய அற இலக்கியமாக அறிவிக்க உத்தரவிடக் கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
துாத்துக்குடி மாவட்டம் கடம்பூர் செல்வகுமார், இதற்கான பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு அளித்த உத்தரவு:
திருக்குறளை தேசிய அற இலக்கியமாக அறிவிக்க உத்தரவிடும் மனுவை அனுமதித்தால், அனைத்து மாநிலங்களிலும் அவரவர் மொழிகளில் உயர்ந்த இலக்கியங்களை தேசிய அற இலக்கியமாக அறிவிக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யத் துவங்குவர்.
வழக்குகளின் எண்ணிக்கை உயரும். தேவையற்ற சர்ச்சைகள் உருவாகும். இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.