ADDED : மார் 14, 2025 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். பல்வேறு நிகழ்வுகளில், முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதுாறாகப் பேசியதாக, அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.
இரு தரப்பு வாதங்களூக்குப் பின் நீதிபதி, 'பொது வெளியில் பேசும் போது வரைமுறையுடன் பேச வேண்டும். விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்' எனக் கூறி, சண்முகம் மீதான வழக்குகளை ரத்து செய்தார்.