தேசிய கொடி ஏற்றுபவர்களை தடுத்தால் குண்டர் சட்டம்: ஐகோர்ட் கடும் எச்சரிக்கை
தேசிய கொடி ஏற்றுபவர்களை தடுத்தால் குண்டர் சட்டம்: ஐகோர்ட் கடும் எச்சரிக்கை
ADDED : ஆக 12, 2024 11:51 AM

சென்னை: 'சுதந்திர தினத்தையொட்டி, தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கலாம்' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. சுதந்திர தினத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கு
சுதந்திர தினத்தையொட்டி, குடியிருப்போர் நலச்சங்கத்தில் கொடியேற்றுவதற்கு, முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று (ஆகஸ்ட் 12) சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்தார்.
அவமானம்
அப்போது அவர் கூறியதாவது: தேசிய கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம். கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம்.
போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.