விடுதி மாணவர்கள் போராட்டம் விருத்தாசலத்தில் பரபரப்பு
விடுதி மாணவர்கள் போராட்டம் விருத்தாசலத்தில் பரபரப்பு
ADDED : மே 13, 2024 04:54 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கல்லுாரி விடுதி மாணவர்கள், நள்ளிரவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி வளாகத்தில், மிகவும் பிற்பட்டோர் மாணவர்களுக்கான விடுதி உள்ளது.
இங்கு, மூன்றாமாண்டு மாணவர்கள் நேற்று இரவு 9:00 மணியளவில், விடுதி வளாகத்தில் பிரிவு உபசார விழா நடத்தினர்.
இதற்கு இரண்டாமாண்டு மாணவர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விடுதி வார்டனிடம் தகவல் தெரிவித்தும், அவர் வராததை கண்டித்து, மூன்றாமாண்டு மாணவர்கள் 15க்கும் மேற்பட்டோர், இரவு உணவை சாப்பிட மறுத்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால், மாணவர்களுக்குள் சமரசம் ஏற்படாததால், நள்ளிரவு 11:00 மணி வரை போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
இதனால், விடுதி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.