sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க., வேட்பாளர் பணம் ரூ.31.74 லட்சம் சிக்கியது எப்படி? 'போட்டு கொடுத்த' தி.மு.க.,வினர்

/

அ.தி.மு.க., வேட்பாளர் பணம் ரூ.31.74 லட்சம் சிக்கியது எப்படி? 'போட்டு கொடுத்த' தி.மு.க.,வினர்

அ.தி.மு.க., வேட்பாளர் பணம் ரூ.31.74 லட்சம் சிக்கியது எப்படி? 'போட்டு கொடுத்த' தி.மு.க.,வினர்

அ.தி.மு.க., வேட்பாளர் பணம் ரூ.31.74 லட்சம் சிக்கியது எப்படி? 'போட்டு கொடுத்த' தி.மு.க.,வினர்

2


UPDATED : ஏப் 15, 2024 05:40 AM

ADDED : ஏப் 15, 2024 05:38 AM

Google News

UPDATED : ஏப் 15, 2024 05:40 AM ADDED : ஏப் 15, 2024 05:38 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: வெள்ளகோவிலில், பா.ஜ., நிர்வாகி வீட்டில் இருந்து, ஈரோடு அ.தி.மு.க, வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் கொடுத்து வைத்திருந்த, 31.74 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதன் பின்னணியில், தி.மு.க.,வினர் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், தீத்தாம்பாளையம், பரப்புமேட்டை சேர்ந்தவர் ஜவஹர் குமார், 55; பா.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலர். இவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 31 லட்சத்து 74 ஆயிரத்து, 200 ரூபாயை பறிமுதல் செய்தனர். இப்பணத்தை காங்கேயம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் ஒப்படைத்தனர். பத்து லட்சத்துக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.

கைப்பற்றப்பட்ட பணம், ஈரோடு அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருடையது என்பதும் கடந்த ஒரு வாரம் முன் பா.ஜ., நிர்வாகியிடம் பணத்தை அவர் ஒப்படைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

ஆற்றல் அசோக்குமார், பா.ஜ., எம்.எல்.ஏ., சரஸ்வதியின் மருமகன். தேர்தலுக்கு முன், பா.ஜ.,வில் இருந்த அசோக்குமார், தேர்தல் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க.,வில் ஐக்கியமானார்.

பறக்கும் படையினருக்கு முன்னதாக, இரண்டு இன்ஸ்பெக்டர்கள் பா.ஜ., நிர்வாகி ஜவஹர் குமார் வீட்டில் சோதனை மேற்கொண்டது குறித்து தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர், திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்துக்கு பணப்புழக்கம் குறித்து தகவல் கொடுத்துள்ளனர். எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், காங்கயம் மற்றும் தாராபுரத்தை சேர்ந்த, இரு இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார், பா.ஜ., நிர்வாகி வீட்டில் மதியம் சோதனை மேற்கொண்டனர்.

கட்டில், பீரோ மற்றும் ரகசிய இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட, 500 ரூபாய் கட்டுக்களான, 31 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.

இந்த பணத்தை நேரடியாக ஒப்படைப்பதில் சிக்கல் இருந்ததால், அந்த தொகுதியை சேர்ந்த பறக்கும் படையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து ஒப்படைத்தனர்.

பா.ஜ.,வில் இருந்தபோது, ஆற்றல் அசோக்குமாரிடம், ஜவஹர் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அறக்கட்டளை பொறுப்பு போன்றவற்றை கவனித்து வந்தார்.

அ.தி.மு.க.,வில் சேர்ந்த பின்னும், தனக்கு நம்பிக்கைக்கு உரிய மாற்று கட்சி நபர்களிடம், ஆற்றல் அசோக்குமார் தொடர்பில் இருந்து வருகிறார்.

ஈரோடு தொகுதியை பொறுத்தவரை, ஆற்றல் அசோக்குமாரின் கை ஓங்கியிருப்பதால், அவர் ஆளும்கட்சி தரப்பில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். இதன் காரணமாக, தற்போது சோதனையில் பணம் சிக்கியுள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us