UPDATED : மே 20, 2024 09:42 PM
ADDED : மே 20, 2024 08:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நான் இன்னும் எதையும் சாதிக்கவில்லை என இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.சென்னை ஐ.ஐ.டி.,யில் இளையராஜா பெயரில் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படுகிறது.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசியது, , கிராமத்திலிருந்து எப்படி சென்னை வந்தேனோ, அப்படியே தான் இருக்கிறேன். நான் இன்னும் எதையும் சாதிக்கவில்லை.இசை என் உயிர் மூச்சை போன்றது; இசையமைப்பது எனக்கு மூச்சுவிடுவதைப் போல் இயல்பானது.நன்றாக இசையமைப்பதாக யாரவது சொன்னால் நன்றாக சுவாசிக்கிறீர்கள் என்று சொல்வதைப் போல் உள்ளது என்றார்.

