அடையாள சான்று மறுப்பு: மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு
அடையாள சான்று மறுப்பு: மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு
ADDED : ஏப் 26, 2024 02:27 AM
சென்னை:தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி, பல மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள சான்று வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான சங்கத் தலைவர் ஜான்சிராணி கூறியதாவது:
கடந்த மார்ச்சில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக சான்று வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதே காரணம் என்று கூறி ஏமாற்றி வருகின்றனர்.
ஆனால், மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, மேலுார், துாத்துக்குடி, கோவில்பட்டியில் வழங்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இயக்குனர் லட்சுமியை தொடர்பு கொண்டபோது, இத்திட்டம் நிறுத்தப்பட்டிருந்தால் தவறு தான். நடவடிக்கை எடுப்பதாக கூறினார். எனவே, இத்திட்டத்தை சட்டவிரோதமாக நிறுத்தி வைத்துள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு, எங்கள் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

