ADDED : ஆக 14, 2024 08:51 PM
திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் போன்ற முக்கிய திட்டங்களுக்கான நிதியை, மத்திய அரசு வழங்காமல் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. இது பற்றிய புள்ளி விபரங்களோடு பார்லிமென்டில் பேசியுள்ளேன்.
தமிழக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி இருந்த போதிலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 21,000 கோடி ஒதுக்கி உள்ளது. ஆனால், மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட கொடுக்கவில்லை.
சென்னை மற்றும் துாத்துக்குடியில் நிகழ்ந்த வெள்ள பாதிப்புக்கு நிவாரணமாக, 37 ஆயிரத்து 97 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய பின், வெறும் 276 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கியது. அதே சமயம், குஜராத் போன்ற மாநிலங்களின் வெள்ள பாதிப்பு போன்ற பேரிடர்களுக்கு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மத்திய அரசு கொடுத்துள்ளது.
மதத்தால் பிரிவினை அரசியல் செய்யும் பா.ஜ., கட்சியில் சேர்ந்திருப்பதால் தான், மூத்த பா.ஜ., அரசியல்வாதியான ராமலிங்கம், தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும், என்கிறார். இது கண்டிக்கப்பட வேண்டும்.
துரை வைகோ, எம்.பி.,- ம.தி.மு.க.,