தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'த.வெ.க.,வில் சந்தோஷமாக இருக்கிறேன்'

 'த.வெ.க.,வில் சந்தோஷமாக இருக்கிறேன்'

 'த.வெ.க.,வில் சந்தோஷமாக இருக்கிறேன்'

1


ADDED : செப் 02, 2026 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 07:02 AM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

இதற்கிடையில், இசக்கி சுப்பையா கூறியதாவது:

த.வெ.க., தலைமை வாய்ப்பளித்தால், இடைத்தேர்தலில் நின்று, அமோக வெற்றி பெற்று பணியாற்றுவேன். யார் வற்புறுத்தலும் இல்லாமல், சட்டசபை விதிகளின்படி, என் ராஜினாமா கடிதத்தை, சபாநாயகரிடம் அளித்தேன். அவர் நன்கு விசாரித்து, அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு, என் மனுவை ஏற்றுக் கொண்டார்.

அம்பாசமுத்திரம் தொகுதி காலியாக இருப்பதாக, தேர்தல் கமிஷனுக்கு தகவல் அளித்தார். அதை ஏற்று தேர்தல் கமிஷனும் தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்து விட்டது. இதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை. ஆனால், என் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என, அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

வழக்கு உடனடியாக முடிந்தால் பிரச்சனை இல்லை. வாய்தா மேல் வாய்தா கேட்டு வழக்கு நீடித்தால் பாதிக்கப்படுவது, அம்பாசமுத்திரம் தொகுதி மக்கள். என் ராஜினாமா ஏற்கப்பட்டதா அல்லது ஏற்கப்படவில்லையா என்ற கேள்விக்குறி வருகிறது. ஏற்கவில்லை என்றால், எம்.எல்.ஏ.,வாக செயல்பட அனுமதிக்க வேண்டும். முடிவு வரும் வரை, தொகுதி காலியாக இருக்ககூடாது. த.வெ.க.,வில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us