ஒரே பள்ளியில், 168 பேர் 'பெயில்' கல்வித்துறையினர் கடும் அதிர்ச்சி
ஒரே பள்ளியில், 168 பேர் 'பெயில்' கல்வித்துறையினர் கடும் அதிர்ச்சி
ADDED : மே 11, 2024 12:05 AM

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் ஒரே பள்ளியில், 168 மாணவர்கள் தேர்ச்சி பெறாதாதது மாவட்ட கல்வித்துறை அலுவலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 205 மாணவர், 134 மாணவியர் என, 339 பேர் தேர்வெழுதினர். இவர்களில், 100 மாணவர், 71 மாணவியர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களில், 105 பேரும், மாணவியரில், 63 பேரும் என மொத்தம், 168 பேர் தேர்ச்சி பெறவில்லை.
மாணவர் தேர்ச்சி சதவீதம், 48.78. மாணவியர் தேர்ச்சி சதவீதம், 52.99. பள்ளி மொத்த தேர்ச்சி சதவீதம், 50.44. மாவட்டத்தில் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற அரசு பள்ளி என்ற மோசமான சாதனையை இப்பள்ளி படைத்துள்ளது.
28 சதவீதம் சரிவு
கடந்த, 2023 ல் இப்பள்ளியில், 192 மாணவர், 127 மாணவியர் என, 319 பேர் தேர்வெழுதியுள்ளனர். 148 மாணவர், 105 மாணவியர் என, 253 பேர் தேர்ச்சி பெற்றனர். 66 பேர் தேர்ச்சி பெறவில்லை. மாணவர் தேர்ச்சிசதவீதம், 77.08, மாணவியர் தேர்ச்சி சதவீதம், 82.68. மொத்த தேர்ச்சி சதவீதம், 79.31.
கடந்தாண்டை விட நடப்பு ஆண்டு மாணவர் தேர்ச்சி சதவீதம், 28.3 சதவீதமும், மாணவியர் தேர்ச்சி சதவீதம், 29.69 குறைந்துள்ளது. மொத்த தேர்ச்சி சதவீதம், 28.87 சதவீதமும் குறைந்து விட்டது. கடந்த முறை, 66 பேர் தேர்ச்சி பெறவில்லை. இம்முறை இது, 168 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இப்பள்ளியில் நுாற்றுக்கு மேற்பட்டோர் தேர்ச்சி பெறாததால், மாநிலத்தில், 21வது இடத்துக்கு திருப்பூர் தள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒரு பள்ளியில் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருந்தால் கூட, 15 இடங்களுக்குள் திருப்பூர் வந்திருக்க வாய்ப்புள்ளது. பள்ளி தேர்ச்சி சதவீதம் சரிவு தொடர்பாக ஓரிரு நாளில் களஆய்வு, விசாரணை நடத்தப்படும்,' என்றனர்.