ADDED : செப் 08, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாத ஓய்வூதியம், 20,000 ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாகவும், அவர்களின் வாரிசுளுக்கான குடும்ப ஓய்வூதியம், 11,000த்தில் இருந்து 11,500 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என, சுதந்திர தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க, அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல, வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி வழித்தோன்றல்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் மாதம் 10,000த்தை 10,500 ரூபாயாக உயர்த்தவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.