ADDED : ஆக 13, 2024 02:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகம் முழுதும் மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான மின்வாரியம் மேற்கொள்கிறது. இந்நிறுவனத்திற்கு, அனல், நீர், எரிவாயு மின் நிலையங்களும், துணைமின் நிலையங்களும் உள்ளன.
அவற்றில், 'கிளாஸ் 1, 2, 3, 4' என, நான்கு பிரிவுகளில் உதவி பொறியாளர், கள உதவியாளர், கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் என, மொத்தம், 1.42 லட்சம் பணியிடங்களுக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அனைத்து பதவிகளிலும், 81,208 பேர் பணிபுரியும் நிலையில், 61,000 காலியிடங்கள் உள்ளன.
அதில், மின்கம்பம் நடுதல், மின்சாதன பழுதை சரிசெய்தல் உள்ளிட்ட களப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களின் காலியிடங்கள், 46,500 ஆக உள்ளன.
எனவே, காலியிடங்களை விரைந்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

