ADDED : ஆக 15, 2024 02:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூகுள் நிறுவனம் முக்கிய தினங்களின் போது தன் தேடுபொறியில் அந்த தின சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் 'டூடுல்' ஓவியம் வெளியிட்டு அனைவர் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் கூகுள் நிறுவனம், தன் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான 'ஜிபே'வில் புதுமையை புகுத்தியுள்ளது. பணம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் நீல நிற 'டிக்' தோன்றுவது வழக்கம். தற்போது நீல நிற 'டிக்'குக்கு பின்புறம் இந்திய தேசிய கொடியின் மூவர்ணமாகிய காவி, வெள்ளை, பச்சை நிறங்களுடன் விமானங்கள் பறப்பது போலவும்; அந்த காட்சியை சிறுமி ஒருவர் ரசிப்பது போலவும் காட்சி தோன்றுகிறது.
இதை பொதுமக்கள் பலர் வரவேற்றுள்ளனர்.
நமது நிருபர்