ADDED : மே 03, 2024 01:31 AM
சென்னை:சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், மார்ச் 26ல் தேர்தல் பறக்கும் படையினர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், 3.99 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம், திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார், நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் ஊழியர்கள் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றனர்.
அதன் அடிப்படையில், நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், அவரிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு, 'சம்மன்' அனுப்பினர்.
அவர்களில், முருகன், ஆசைத்தம்பி ஆகியோர், சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராகினர்.
இருவரிடமும் டி.எஸ்.பி., சசிதரன் தலைமையிலான போலீசார் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தனர். ஜெய்சங்கர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.