பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்: 2 பேர் கைது; ஒருவர் ஓட்டம்
பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்: 2 பேர் கைது; ஒருவர் ஓட்டம்
ADDED : மே 06, 2024 11:30 PM

திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் இன்ஸ்டாகிராமில் பழகி 19 வயது இளம் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து வலைதளத்தில் வெளியிட்டு மிரட்டிய இருவர் கைது செய்யபட்டனர். ஒருவரை போலீசார் தேடுகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் அதே கிராமத்தை சேர்ந்த சந்துரு 20, என்ற வாலிபருடன் பழகினார். ஓராண்டிற்கு முன் ஆசை வார்த்தை கூறி சந்துரு, தனுஷ் 20, சக்திநாதன் 20, மூவரும் அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தனர். இதை வீடியோ எடுத்தனர்.
அப்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆபாச வீடியோவை காட்டி பணம், நகை கேட்டு அப்பெண்ணை தொந்தரவு செய்தனர். அப்பெண் மறுத்தார். இதனால் அந்த வீடியோவை வலைதளங்களில் வெளியிட்டனர். திருமணம் நின்றது.
அப்பெண் திருவாடானை மகளிர் போலீசில் புகார் செய்தார். சந்துரு, தனுஷ் இருவரையும் கைது செய்த போலீசார் சக்திநாதனை தேடி வருகின்றனர்.