திமுக அரசுக்கு நீர் முக்கியமா? பீர் முக்கியமா?: இ.பி.எஸ்., கேள்வி
திமுக அரசுக்கு நீர் முக்கியமா? பீர் முக்கியமா?: இ.பி.எஸ்., கேள்வி
UPDATED : மே 04, 2024 01:42 PM
ADDED : மே 04, 2024 01:04 PM

சேலம்: 'திமுக அரசுக்கு குடிநீர் முக்கியம் இல்லை. பீர் தான் முக்கியம்' என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் நடந்த பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது:
கேரளா பயணம் ஏதுக்கு?
ரகசிய பயணம் எதுவும் நான் மேற்கொள்ளவில்லை. ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றிருந்தேன். அதிக நேரம் நிற்பதால் குதிகாலில் வலி ஏற்பட்டது. தமிழகத்தில் அரசு பஸ்கள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன. புதிய பஸ்கள் வாங்குவதாக திமுக ஆட்சியில் பொய் கூறுகின்றனர். சென்னையில் மின்சார பஸ்களுக்கு அதிமுக ஆட்சியில் ஜெர்மனியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஸ்டாலினை சாடிய இ.பி.எஸ்.,
அதிமுக ஆட்சியில் தான் 14 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. அரசு பஸ்களில் பயணிகள் மிகுந்த அச்சத்துடனே பயணித்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் துவங்கிய காரணத்தினால் நீர்வளத்திட்டங்களை திமுக அரசு கைவிட்டதே தற்போதைய வறட்சிக்கு காரணம். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் மீதமிருந்த 15 சதவீத பணிகளை நிறைவேற்றினால் 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். நிலவும் கடும் வறட்சியால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்கச் செல்வது சரியா?. இவ்வாறு அவர் கூறினார்.