ADDED : ஜூலை 24, 2024 12:49 AM
சென்னை:'முஸ்லிம் பெண்கள் சங்கத்துக்கு நிதி உதவி கோரி வந்த கடிதத்தை, சார்நிலை அலுவலகங்களுக்கு வழக்கமான நடைமுறைப்படி அனுப்பினோம், இதில், நிதி வழங்க பரிந்துரைக்கவில்லை' என, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, முஸ்லிம் பெண்கள் உதவி சங்கத்துக்கு பல்வேறு தரப்பில் நிதி உதவி கோரிய கடிதம், பதிவுத்துறை தலைவர் அலுவலகத்துக்கு வந்தது. ஒரு அரசு துறை அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட கடிதத்தை, தகவலுக்காக சார்நிலை அலுவலகங்களுக்கு அனுப்புவது வழக்கம். அவ்வாறே இந்த கடிதமும், பதிவுத்துறையின் சார்நிலை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது.
இது, பதிவுத்துறை தலைவரின் அறிவுரையோ, கோரிக்கையோ, பரிந்துரையோ அல்ல. எந்த சங்கத்துக்கும் நிதி உதவி வழங்குவது தொடர்பான எந்த நடவடிக்கையும், இந்த அலுவலகத்தில் நடப்பது இல்லை.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

