உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 16, 2026 06:27 AM

அ நிறம் | அளவு
சென்னை: ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி காமராஜ், பா.ஜ.,வில் இணைய உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த காமராஜ், ஹரியானா மாநிலத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவர். கடந்த 2015ல் ஓய்வு பெற்றார். பா.ஜ., தலைவர்களுடன் நட்பில் இருக்கும் காமராஜ், 2019ல் ஹரியானா சட்டசபை தேர்தலில், போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. தற்போது, அவர் பா.ஜ.,வில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், நாளை சென்னை வருகிறார். அவரது முன்னிலையில், காமராஜ் பா.ஜ.,வில் இணைய இருப்பதாகவும், அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும், அக்கட்சியினர் தெரிவித்தனர்.
