ADDED : ஜூன் 01, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது.
விண்வெளிக்கு மனிதர்கள் மூவரை அனுப்பி சோதனை மேற்கொள்ள உள்ள ககன்யான் திட்ட பணிகள் நடந்து வருகிறது. ககன்யான் திட்டத்தில் மனிதர்களை விண்ணில் இருந்து மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் மூன்றாவது கட்டத்தில் பயன்படும் இன்ஜின் சோதனை நேற்று திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் நடந்தது.
வளாக இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் தலைமையில் 1700 வினாடிகள் இன்ஜின் இயங்கி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் 725 வினாடிகள், 350 வினாடிகள் என இரு முறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.