ADDED : மார் 31, 2024 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி,: சிவகங்கை மாவட்டம், கல்லலில் நடந்த காங்., வேட்பாளர் கார்த்தி அறிமுக கூட்டத்தில் பொதுமக்களை கேட்டிற்குள் அடைத்து அனைவருக்கும், 200 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டது.
இதில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அமைச்சர் பெரியகருப்பன், கார்த்தி எம்.பி., உள்ளிட்ட தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் மண்டப வளாகத்திற்குள் வந்திருந்தவர்கள் அடைக்கப்பட்டனர். பிறகு கேட் நுழைவு வாயிலில் முதலில் பெண்கள், அடுத்து ஆண்கள் என, வரிசையாக அனுப்பப்பட்டனர்.
நுழைவு வாயிலில் நின்ற நிர்வாகி ஒருவர் அனைவருக்கும், 200 ரூபாய் பட்டுவாடா செய்தார். பட்டுவாடாவை தேர்தல் பறக்கும் படையினரோ, போலீசாரோ கண்டுகொள்ளவில்லை.

