கேரளா புதிய அணை கட்ட முடியாது: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி
கேரளா புதிய அணை கட்ட முடியாது: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி
ADDED : மே 23, 2024 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : முல்லைப் பெரியாறு அணை அருகே தமிழக அரசின் அனுமதி இன்றி கேரள அரசு புதிய அணை கட்ட முடியாது என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
போடியில் அவர் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர்தேக்கலாம் என இருந்ததை 152 அடியாக உயர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தி வெற்றியும் கண்டார். அந்த அணை அருகே புதிய அணை கட்டுவது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தின் நிலையான, இறுதி தீர்ப்பு உள்ளது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி கேரள அரசு புதிய அணை தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. தமிழக அரசின் அனுமதி இன்றி அங்கு புதிய அணை கட்ட முடியாது.
மீறி செயல் பட்டால் அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு சார்பில் கடுமையாக எதிர்ப்போம் என்றார்.