
தமிழகத்தில் இந்த வார கொலைகள்
4.8.24 முதல் 10.8.24 வரை
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர், சென்னை காசிமேட்டில் தங்கி, வலை பின்னும் தொழில் செய்து வந்தார். நண்பரும், சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவருமான உமா மகேஷ்வரராவ், 33 என்பவருடன் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டார்
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கண்ணன் மனைவி திலகவதி, 33. இவருக்கும், ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ராகவேந்திரனுக்கும் தகாத உறவு இருந்தது. இதை திலகவதியின் சகோதரர் தமிழ்ராஜா கண்டித்தார். எனினும் திலகவதி தகாத உறவை தொடர்ந்ததால், அவரை தமிழ்ராஜா, 41, கழுத்தை நெரித்து கொலை செய்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெ.காருப்பள்ளியைச் சேர்ந்தவர் வெங்கட்ராஜ், 24. கூலித்தொழிலாளி. இவர், அதே மாவட்டத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை கடத்திய வழக்கில், போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமினில் வந்தார். அதன் பின்னரும் சிறுமியை பின்தொடர்ந்து வந்தார். இதை கண்டித்த சிறுமியின் தந்தையை கட்டையால் அடித்துக் கொன்றார்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் ரஞ்சித் கண்ணன், 17. ஸ்ரீரங்கத்திற்கு உறவினர் வீட்டிற்கு சென்றவர், காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை வேடிக்கை பார்த்துள்ளார். அப்போது, அங்கு இருந்த மற்றொரு தரப்பினருடன் ஏற்பட்ட தகராறில், கல்லால் அடித்து ரஞ்சித் கண்ணன் கொல்லப்பட்டார்
சென்னை சூளையைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 28. கணவரை பிரிந்து வாழும் இவருக்கும், ஓட்டேரியைச் சேர்ந்த ரூபனுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் திருவல்லிக்கேணியில் அறை எடுத்து தங்கியபோது வாக்குவாதம் ஏற்பட்டு, ஜெயலட்சுமியை ரூபன் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நடுவகளப் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 54. இந்திய கம்யூ., கட்சி உறுப்பினரான இவர், இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார்.