தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வி.எஸ்.பாபு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

வி.எஸ்.பாபு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

வி.எஸ்.பாபு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

5


UPDATED : நவ 19, 2026 05:12 PM

ADDED : நவ 19, 2026 04:02 PM

Follow on GoogleFavourite on Google

5

UPDATED : நவ 19, 2026 05:12 PM ADDED : நவ 19, 2026 04:02 PM


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

அவர்களின் அறிக்கை:

தமிழக கவர்னர் -அர்லேகர்


வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

முதல்வர் விஜய்


வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்ற வி.எஸ்.பாபு திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.அவரின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக தலைவர் ஸ்டாலின்


வி.எஸ்.பாபு மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீ த லீடர்ஸ் அண்ணாமலை


வி.எஸ். பாபு காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தவெக கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.வி.எஸ். பாபு ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!

இபிஎஸ் இரங்கல்


கொளத்துார் தொகுதி எம்எல்ஏ விஎஸ் பாபு மறைவு செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி


தவெகவைச் சேர்ந்த வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.70 நாள்களுக்கு மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவரது உடல்நிலை தேறி வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கொளத்தூர் தொகுதி மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி


பாபு காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அவர் சார்ந்த இயக்கத்தினருக்கு எனது ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன்

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us