ADDED : செப் 09, 2024 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்துக்கு லட்சக்கணக்கான கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு சென்று, எதிர்பார்த்தது போலவே பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். அவையெல்லாம் செயல்பாட்டுக்கு வரும்போது, தமிழகம் கட்டாயம் தொழில் துறையில் உச்ச நிலையை அடையும். அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தற்போது, அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேறிய மாநிலமாக உள்ளது. இதை பொறுக்க முடியாத அரசியல்வாதிகள் தான், காழ்ப்புணர்ச்சி காரணமாக தவறான கருத்துக்களை சொல்கின்றனர். நிறைவேற்ற முடியாத கனவுகளுடன் வாழும் அந்த அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே, இப்படிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் ஏற்படுகின்றன.
- கனிமொழி, துணை பொதுச்செயலர், தி.மு.க.,