கிறிஸ்துவத்தை பரப்பும் சொற்பொழிவு நிகழ்ச்சி ரத்து
கிறிஸ்துவத்தை பரப்பும் சொற்பொழிவு நிகழ்ச்சி ரத்து
ADDED : மார் 09, 2025 02:25 AM
சென்னை: சென்னை பல்கலையின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில், 'சர்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் நினைவு சொற்பொழிவு' நிகழ்ச்சிக்கு வரும், 14ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், 'இந்தியாவில் கிறிஸ்துவத்தை பரப்புவது எப்படி; நமக்கு ஏன் இந்த மார்க்கம் தேவை' என்ற தலைப்புகளில் சொற்பொழிவு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அழைப்பிதழும் வழங்கப்பட்டது. இது, சமூக வலைதளங்களில் வெளியானது. கல்வி நிறுவனங்கள், மதம், ஜாதிக்கு அப்பாற்பட்டவை.
அங்கு ஒரு மதத்தை பரப்புவது எப்படி என, எப்படி கருத்தரங்கு நடத்தலாம் என்று எதிர்ப்பு கிளம்பியது. இந்நிகழ்ச்சியை நடத்த, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதனால், நிர்வாகக் காரணங்களுக்காக, அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, துறையின் தலைவர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.