ADDED : மே 24, 2024 04:44 AM

'பயலாஜிக்கலாக நான் பிறக்கவில்லை; கடவுள் தான் அனுப்பி வைத்தார்' என, பிரதமர் மோடி பேசுகிறார். 21ம் நுாற்றாண்டில், அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில், பிரதமர் மோடி இப்படி பேசினால், அவரை எப்படி விமர்சிப்பது?
பிரதமர் மோடி, பா.ஜ.,வை தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, எதையும் சொல்லலாம் என பேசுவது, ஒரு பித்தலாட்டம். அதை அரசியல் தெரிந்த ஒவ்வொருவரும் அறிவர். இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறையுடன் எப்போதும் இருக்க வேண்டிய பிரதமர், ஒடிசாவுக்கு சென்று, தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசுகிறார்.
தமிழகத்தில் தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி.,யாக இருப்பவர்கள், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்களை நாங்கள் ஒருபோதும் விமர்சித்தது இல்லை. அப்படி செய்யவும் மாட்டோம்.
வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு செல்லும்போது, தமிழகத்தைச் சார்ந்த ராஜாஜியிடம் தான் கஜானா சாவியை கொடுத்தனர்.
இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும்போது, தமிழரைத் தான் வெள்ளைக்காரர் நம்பினர். பிரதமர் மோடியை கடவுள் அனுப்பி வைத்தார் என்றால், அவர் கடவுளிடமே செட்டிலாகட்டும். ஜூன் 4ம் தேதிக்கு பின் கடவுள் பணியை, பிரதமர் மோடி செய்யட்டும்.
- ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க., அமைப்பு செயலர்