ADDED : மே 25, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மணிவாசகன் என்ற இளைஞர், 'ஆன்லைன்' சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது இளம் மனைவியும், ஒன்றரை வயது குழந்தையும் ஆதரவற்றவர்களாகி உள்ளனர்.
இத்தகைய கொடூரமான சூதாட்டம் இனியும் தொடருவதை அரசு அனுமதிக்கக் கூடாது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தடை பெற வேண்டும்.
அதற்கு எந்த நடவடிக்கையையும், தமிழக அரசு எடுக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் தற்கொலைகள் தொடரட்டும் என, தமிழக அரசு வேடிக்கை பார்க்கப் போகிறதா?
- ராமதாஸ்,
பா.ம.க., நிறுவனர்

