ADDED : ஆக 02, 2024 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: குறிஞ்சிப்பாடி, அண்ணா நகரை சேர்ந்தவர் அறிவுமணி,39; இவர் மீது 8 சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் 25ம் தேதி எல்லப்பன்பேட்டையில் சாராயம் விற்ற அறிவுமணியை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, அறிவுமணியை தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.