மதுரை, நெல்லை போக்குவரத்து கழகங்களுக்கு தலைவர் நியமனம்
மதுரை, நெல்லை போக்குவரத்து கழகங்களுக்கு தலைவர் நியமனம்
ADDED : ஜூன் 16, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மதுரை, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகங்களின் தலைவர் மற்றும் இயக்குனராக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள எட்டு போக்குவரத்து கழகங்களுக்கு, எட்டு நிர்வாக இயக்குனர்கள் உள்ளனர். அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும், போக்குவரத்து துறை செயலர் பணீந்தர் ரெட்டி தலைவராக இருந்து வருகிறார். தற்போது, அதில் நிர்வாக சீர்திருத்தம் செய்யப்படுகிறது.
மதுரை, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, தற்போதுள்ள நிர்வாக இயக்குனர்கள், அடுத்த சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளனர். அதையடுத்து, மதுரை, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகங்களின் தலைவர் மற்றும் இயக்குனர் பொறுப்பில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் செல்வராஜ் நியமிக்கப்படுகிறார் என, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.