உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 18, 2026 06:27 AM

அ நிறம் | அளவு
சென்னை: தி.மு.க., ஆட்சியின்போது, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில், 100 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
தனியார் பள்ளிகள் சங்க தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டார். தி.மு.க., ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த மகேஷுக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தி 118 ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
போலீசார் கூறுகையில், 'உறுதியான ஆவணங்கள் கிடைத்ததன் அடிப்படையில், மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
'சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இயங்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசில், விசாரணைக்கு மகேஷ் இன்று ஆஜராக உள்ளார். கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில், அவரிடம் கேள்விகள் கேட்கப்படும்' என்றனர்.
