மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு சட்டப்படி நிவாரணம் வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு சட்டப்படி நிவாரணம் வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
ADDED : ஆக 01, 2024 11:27 PM
மதுரை : ''திருநெல்வேலி மாஞ்சோலை தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு சட்டப்படி நிவாரணம் கொடுக்க வேண்டும்'' என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மாஞ்சோலை தொடர்பாக நீதிமன்றத்தில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 1929 முதல் மாஞ்சோலையை பூர்விடமாக கொண்டு 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்தனர். இவர்களுக்கு தேயிலை தோட்டப் பணிகளை தவிர வேறு தெரியாது. 2006 வன உரிமை சட்டத்தின்படி தொழிலாளர்கள் மாஞ்சோலையில் வாழ உரிமை உள்ளது. நீதிமன்றம் கேட்ட தகவல் வேறு, தமிழக அரசு நீதிமன்றத்தில் கொடுத்த தகவல் வேறாக உள்ளது.
போலீசார் மூலம் தொழிலாளர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர். தமிழக அரசு கொடுத்த நிவாரண அறிவிப்புகளில் நீதிமன்றத்திற்கு திருப்தி இல்லை. மாஞ்சோலை வழக்கில் மத்திய அரசின் பழங்குடியினத்துறையை இணைத்துள்ளோம். எனவே மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கருணை காட்ட வேண்டாம், சட்டப்படி நிவாரணம் கொடுக்க வேண்டும்.
டான் டீ நிறுவனம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்துவதில் உடன்பாடு இல்லை. தொழிலாளர்களே எடுத்து நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றார்.