ADDED : ஜூன் 20, 2024 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய பலி சம்பவம் குறித்து, தமிழக கவர்னர் ரவி, சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாக கூறப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயம்.
இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.