முருகன் வயிற்றில் தியானம்: முத்துமலை கோவிலில் பழனிசாமி
முருகன் வயிற்றில் தியானம்: முத்துமலை கோவிலில் பழனிசாமி
ADDED : ஜூன் 04, 2024 02:49 AM

ஆத்துார்: லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டி, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சிறப்பு வழிபாடு செய்தார்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, ஏத்தாப்பூர் பகுதியில் முத்துமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 146 அடி உயரத்தில் முருகன் மற்றும் 108 அடி உயரத்தில் வேல் சிலை உள்ளது.
இக்கோவிலுக்கு நேற்று காலை வந்தார் பழனிசாமி.
தங்க கவச அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த, மூலவர் முத்துமலை முருகனை வழிபாடு செய்து, கருவறையில் வைத்துள்ள வேலை தன் கையில் வாங்கி கருவறையைச் சுற்றி வந்தார்.
தொடர்ந்து, 146 அடி உயர முருகன் கையில், 108 அடி உயரத்தில் உள்ள வேலுக்கு, அபிஷேகம் செய்து வழிபட்டார். பின், முருகன் சிலையின் வயிற்றுப் பகுதியில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து வெகுநேரம் தியானம் செய்தார். தொடர்ந்து கோவில் மற்றும் அன்னதான மண்டபத்தில், பக்தர்களுக்கு அ.தி.மு.க., சார்பில், அன்னதானம் வழங்கினார்.