தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க., 'மாஜி' பற்றி ரஜினி பேசியதை குறிப்பிட்ட எம்.எல்.ஏ.,வுக்கு எதிர்ப்பு

 தி.மு.க., 'மாஜி' பற்றி ரஜினி பேசியதை குறிப்பிட்ட எம்.எல்.ஏ.,வுக்கு எதிர்ப்பு

 தி.மு.க., 'மாஜி' பற்றி ரஜினி பேசியதை குறிப்பிட்ட எம்.எல்.ஏ.,வுக்கு எதிர்ப்பு


ADDED : ஆக 20, 2026 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குறித்து நடிகர் ரஜினி பேசியதை குறிப்பிட்டு, சட்டசபையில், த.வெ.க., - எம்.எல்.ஏ., சுதாகர் பேசியதற்கு, தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது.

சட்டசபையில் நடந்த விவாதம்:

த.வெ.க., - சுதாகர்: முதல்வர் விஜய் இருக்கும் வரை, காட்பாடி தொகுதியில் த.வெ.க., ஆட்சி தான் நடக்கும்.

முப்பது ஆண்டுகளுக்கு மேல், அங்கு எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகன் இருந்தும் குடிநீர், சாலை என, அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகவே இருக்கின்றன.

தி.மு.க., - நேரு: காட்பாடியில், 10 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த துரைமுருகன், பல்கலை, பஸ் நிலையம், சாலை, பாலம் என, பலவற்றை கொண்டு வந்துள்ளார்.

அந்த தொகுதியில், ஒருமுறை வெற்றி பெற்று விட்டு, துரைமுருகன் ஒன்றுமே செய்யவில்லை என சொல்லக் கூடாது.

சுதாகர்: விழா ஒன்றில், பிரபல நடிகர் ஒருவர், 'பெயிலே ஆகாத பழைய மாணவர்கள், கிளாஸை விட்டு போக மாட்டேன் என இருக்கின்றனர்' என்றார்.

அந்த பழைய மாணவர்களையும், அவர்களின் வாத்தியாரையும் முதல்வர் விஜய் 'பெயில்' ஆக்கி, வெளியேற்றி விட்டார்.

தேர்தலின் போது துரைமுருகன் மன்றாடியும், மக்கள் அவரை 'பிரேக்' செய்து, 'ரெஸ்ட்' கொடுத்து விட்டனர்.

தி.மு.க., - வேலு: காட்பாடி தான் அனைத்து வசதிகளையும் கொண்ட தொகுதி. நாங்கள் காட்பாடியை பார்த்து பொறாமைப்படுவோம். தன் தொகுதிக்கு துரைமுருகன் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தார்.

தி.மு.க., - நேரு: ஒரே கட்சியில் 50 ஆண்டுகள் இருந்தால், அவர் பழைய மாணவர் என்ற ரீதியில், அந்த நடிகர் கூறினார். உங்கள் அரசு, அமைச்சரை பற்றி மட்டும் பேசுங்கள்; எங்களிடம் வராதீர்கள்.

த.வெ.க., - தாஹிரா: நான் காட்பாடியில் பிறந்து வளர்ந்தவள் தான். காட்பாடி தொகுதிக்கு தி.மு.க., எதுவுமே செய்யவில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

'புகழ்ச்சியை விரும்பாத முதல்வர்'

சட்டசபையில் நேற்று விவாதம் நடந்தபோது, முதல்வர் விஜயை, த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் புகழ்ந்து பேசினர். இதையடுத்து, சபாநாயகர் பிரபாகர், ''தன்னை புகழ்ந்து பேசும்போதே, எனக்கு முதல்வர் விஜய் 'நோட்' அனுப்பி விட்டார். ''தன்னை புகழ்வதை கூட விரும்பாத முதல்வரின் கட்சியில் இருப்பவர்கள், மானிய கோரிக்கைகளை பற்றி மட்டும் சட்டசபையில் பேசுங்கள், '' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us