ADDED : மே 27, 2024 10:16 PM
பள்ளிகள் ஜூன் 6ல் திறக்கப்பட உள்ள நிலையில், உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்க சாத்தியமில்லை. எனவே, தங்கள் பழைய பாஸ் அட்டை, பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி, அரசு பஸ்களில் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.
அதையும் மீறி மாணவர்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலித்தால், நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள், தங்கள் விடைத்தாள் நகலை, இன்று பிற்பகல் 2:00 மணி முதல், www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
விடைத்தாளை ஆய்வு செய்து, மறுகூட்டல் தேவையா, மறுமதிப்பீடு தேவையா என்பதை முடிவு செய்து, அதே இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து, மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், வரும், 29ம் தேதி பிற்பகல், 1:00 மணியில் இருந்து, வரும் 1ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.