ADDED : மே 30, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்தல், மின் வாரிய செயல்பாட்டை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மேற்கொள்கிறது.
இது, மின் வினியோகம் தொடர்பாக பல உத்தரவுகளை பிறப்பிக்கிறது. அவற்றை ஆணையத்தின், 'tnerc.gov.in' இணையதளத்தில் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். சமீபகாலமாக ஆணையத்தின் முகவரி சரிவர இயங்கவில்லை. தற்போது, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதள முகவரி, 'tnerc.tn.gov.in' என, மாற்றம் செய்யப்பட்டுள்ளது.