sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செய்திகள் சில வரிகளில்

/

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்


ADDED : ஜூலை 03, 2024 01:43 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறைத்துறையில், சிறை அலுவலர் மற்றும் உதவி சிறை அலுவலர் பணிக்கு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையம் வழியே தேர்வு நடத்தப்பட்டது.

இதில், தேர்ச்சி பெற்ற, ஐந்து சிறை அலுவலர்கள், நான்கு பெண்கள் உட்பட, 44 உதவி சிறை அலுவலர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்களுக்கு, வேலுார் சிறை மற்றும் சீர்திருத்த பயிற்சியகத்தில், ஒன்பது மாதம் அடிப்படை பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழக தொல்லியல் துறையில், தொல்லியல், அருங்காட்சியகவியல் சார்ந்த, இரண்டாண்டு கால முழுநேர முதுநிலை டிப்ளமா படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0023 என்ற தொலைபேசி எண்ணிலோ, 'tniam2426@gmail.com' என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இரண்டாண்டு பணி அனுபவத்துடன், 40 வயதுக்கு உட்பட்ட கார்பென்டர், ஸ்டீல் பிட்டர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

அதேபோல, சவுதி அரேபிய அமைச்சகத்தில், அலோபதி மருத்துவர்களுக்கு பணி வாய்ப்பு வந்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, 044 - 2250 5886, 2250 2267 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us