ADDED : ஆக 04, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாணியம்பாடி:வாணியம்பாடி அருகே, கப்பல் துறையில் வேலை வாங்கி தருவதாக, 7.50 லட்சம் ரூபாயை மோசடி செய்த கட்டட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே, கூத்தாண்ட குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல், 60, கட்டட மேஸ்திரி. இவரது நண்பர் ஆலங்காயம் ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி சந்திரன், 50.
தனக்கு வேண்டியவர்கள் சென்னையில் பணியாற்றுவதாகவும், அவர்களால் மகனுக்கு கப்பல் துறையில் வேலை வாங்கி தருவதாக, 7.50 லட்சம் ரூபாயை ராஜவேலிடம் சந்திரன் பெற்றுள்ளார்.
வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதால், போலீசில், ராஜவேல் புகாரளித்தார்.
ஆலங்காயம் போலீசார் சந்திரனை கைது செய்தனர்.