ம.பி., அரசு மருத்துவமனையில் துள்ளி விளையாடும் எலிகள்: வீடியோ வைரல்
ம.பி., அரசு மருத்துவமனையில் துள்ளி விளையாடும் எலிகள்: வீடியோ வைரல்
ADDED : ஜூன் 12, 2024 04:22 PM

போபால்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், எலிகள் சுற்றித் திரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் எலிகள் தொல்லை அதிகமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில், மருத்துவமனையில், எலிகள் சுற்றித் திரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
விமர்சனம்
இந்த வீடியோவை மத்திய பிரதேச காங்கிரஸ், எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, மாநிலத்தில் உள்ள சுகாதார வசதிகளின் நிலை குறித்து விமர்சனம் செய்துள்ளது. மருத்துவமனை டீன் ஆர்.கே.எஸ்.தாகாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‛‛எலிகள் பிரச்னையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்''. இவ்வாறு அவர் கூறினார்.