ADDED : செப் 10, 2024 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மிலாது நபி, வரும் 17ம் தேதி கொண்டாடப்படுவதால், அரசு விடுமுறை நாளும் மாற்றப்பட்டுள்ளது. மிலாது நபி பண்டிகையையொட்டி, வரும் 16ம் தேதி, அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது.
'செப்., 4 பிறை தென்படாததால், மிலாது நபி வரும் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே, அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, தமிழக அரசின் தலைமை ஹாஜி, அரசுக்கு கடிதம் எழுதினார்.
அதை ஏற்ற அரசு, மிலாது நபி பண்டிகையை ஒட்டி, வரும் 16ம் தேதிக்கு பதிலாக, 17ம் தேதி அரசு பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
இதற்கான அரசாணையை, தலைமை செயலர் வெளியிட்டு உள்ளார்.