ADDED : மே 12, 2024 05:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு மகன் கம்பன் சென்ற கார் விபத்தில் சிக்கியது.
திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் பகுதியில் அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் சென்ற காரும் மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அமைச்சரின் மகன், உதவியாளர், ஓட்டுநர் மற்றும் மற்றொரு காரில் பயணித்த இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.