sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் பொன்முடி, மகன் பெயர் சேர்ப்பு * 19ல் ஆஜராக சிறப்பு கோர்ட் 'சம்மன்'

/

அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் பொன்முடி, மகன் பெயர் சேர்ப்பு * 19ல் ஆஜராக சிறப்பு கோர்ட் 'சம்மன்'

அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் பொன்முடி, மகன் பெயர் சேர்ப்பு * 19ல் ஆஜராக சிறப்பு கோர்ட் 'சம்மன்'

அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் பொன்முடி, மகன் பெயர் சேர்ப்பு * 19ல் ஆஜராக சிறப்பு கோர்ட் 'சம்மன்'

1


UPDATED : மார் 06, 2025 12:43 AM

ADDED : மார் 05, 2025 08:36 PM

Google News

UPDATED : மார் 06, 2025 12:43 AM ADDED : மார் 05, 2025 08:36 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறை தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் பங்குதாரராக இருக்கும் நிறுவனங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழக வனத் துறை அமைச்சர் பொன்முடி, 2006 - -2011ம் ஆண்டுகளில், கனிம வளங்கள், சுரங்கத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அவரது மகன் கவுதம சிகாமணிக்கு, விழுப்புரம் மாவட்டம் வானுார் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் எடுக்க, 2007ல் அரசு அனுமதி அளித்தது.

பின், ஆட்சி மாற்றத்தை அடுத்து, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, செம்மண் அள்ளியதில் அரசுக்கு, 28 கோடி, 36 லட்சத்து, 40,600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதன் அடிப்படையில், சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், 2023ல் ஜூலை 17ல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின், பொன்முடி, அவரது மகன் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். கணக்கில் வராத 81.7 லட்சம் ரூபாய் பணம், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த அமலாக்கத் துறை, 41.9 கோடி ரூபாய் அளவுக்கான நிரந்தர வைப்பு தொகையையும் முடக்கியது.

இதையடுத்து, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் பொன்முடி மகனும், முன்னாள் எம்.பி.,யுமான கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்பட ஆறு பேருக்கு எதிராக, 2023 ஆக., 21ல் 90 பக்க குற்றப்பத்திரிகையை, அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, 12வது கூடுதல் சி.பி.ஐ., நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில்வேலவன் முன் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை, அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் என்.ரமேஷ் தாக்கல் செய்துள்ளார்.

அதில், அமைச்சர் பொன்முடி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அவரது மகன் கவுதம சிகாமணி பங்குதாரராக இருந்து வரும் விழுப்புரத்தில் உள்ள 'கான்ப்ளூயன்ஸ்' நிறுவனம், அசோக் சிகாமணி பங்குதாரராக உள்ள விழுப்புரம் கே.எம்.ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ராஜமகேந்திரன் நிர்வாக பங்குதாரராக இருந்து வரும் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கே.எஸ்.மினரல்ஸ், பி.ஆர்.எம்.கிரானைட்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அமலாக்கத் துறை தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை ஏற்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில்வேலவன், அமைச்சர் பொன்முடி மற்றும் நிறுவனங்களின் நிர்வாகிகள், வரும் 19ம் தேதி நேரில் ஆஜராக, 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us