தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ காற்று வேக மாறுபாட்டால் மிதமான மழை

காற்று வேக மாறுபாட்டால் மிதமான மழை

காற்று வேக மாறுபாட்டால் மிதமான மழை


ADDED : செப் 11, 2024 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2024 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், இன்று முதல் செப்.16ம் தேதி வரை, இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த மையம் வெளியிட்ட அறிக்கை:

நாட்டின் பல்வேறு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், வறண்ட வானிலையே காணப்படுகிறது. இந்த பின்னணியில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலை, செப்.16 வரை தொடரும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us